Blog Entry# 1124880
Posted: Jun 06 2014 (08:55)
3 Responses
Last Response: Jun 06 2014 (11:07)
ஆத்தூர் - அரியலூர் பாதை நிலை என்ன?
கடந்த, 2012 - 13ல், சேலம் - விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில், ஆத்தூரில் இருந்து, அரியலூர் வரை, 167 கி.மீ., தூரம், புதிய அகல ரயில்பாதை அமைக்க ஆய்வு பணி முடிந்து, 1,049 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது; இதற்கு, ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், ஐந்தாண்டுகளில், இவ்வழியாக, ரயில்கள் இயக்கப்படும் எனவும்; நிலம் ஏற்கனவே கையப்படுத்தியுள்ளதால், பணிகள் விரைவாக முடிக்கப்படும் எனவும், தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஆத்தூர் - அரியலூர் அகல ரயில் பாதை திட்டத்துக்கும், நிதி ஒதுக்கீடு செய்ய, புதிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -...
more...
It will be good if it is via perambalur. At least they will get some rail connection.
if not via perambalur its useless since ARI VRI attur have no LR