பொதுவாக நாம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களில் ரயில் என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயிலயே தேர்வு செய்கின்றனர். காரணம் இதில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் டிக்கெட் விலையும் குறைவு என்பதால் மக்கள் ரயிலையே தேர்வு செய்கின்றனர். இந்த ரயிலில் லோகோமோட்டி என்ற பாகம் தான் ஒட்டுமொத்த ரயிலுக்கும் ஆற்றலை தருகின்றது. இந்த லோகோமோட்டி ஆற்றலை கொடுப்பதற்கு பலவிதமான முறையில் இதற்கு ஆற்றலை செலுத்தி வந்தார்கள்.
உதாரணமாக நீராவி இன்ஜின் மூலமாக முதலில் ரயிலை இயக்கி வந்தார்கள். அதன் பிறகு டீசல் இன்ஜின் மூலமாக ரயிலை இயக்கி வந்தார்கள். அதன் பிறகு எலக்ட்ரிக் லோகோமோட்டி என்ற முறை மூலமாக ரயிலை இயக்கி வந்தார்கள்.
...
more...
நாம் தற்போது பார்க்கப்போவது எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் மாற்றி முறையை பயன்படுத்தி ரயில் எப்படி இயங்குகிறது என்பதை பற்றிதான். எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் பொருத்தவரையில் மற்ற ரயிலை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். அதாவது மற்ற ரயில்களில் அதற்கு தேவையான ஆற்றல் ட்ரெயின் இன்ஜின் அமைந்திருக்கும் இடத்திலேயே ஒரு தனி பாகமாக அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் முறையில் பவர் லைன் மூலமாக வரும் எலக்ட்ரிசிட்டியை இந்த லோகோமோட்டிவ் பகுதிக்கு சப்ளை செய்ய வைத்து இதனை பவர் செய்கிறார்கள். அதாவது இந்த ட்ரெயின் எங்கே எல்லாம் செல்கிறதோ அங்கே எல்லாம் மெயின் லைனில் அதற்கு கூடவே வரும், அந்த லைனில் இருந்து வரும் எலக்ட்ரிசிட்டி பான்டகிராப் என்கின்ற பாகத்தை பயன்படுத்தி அதன் மூலமாக இந்த எலெக்ட்ரிசிட்டியை ட்ரைனுக்கு செலுத்துகிறார்கள். இப்படி செலுத்துகிற இந்த எலெக்ட்ரிசிட்டி ஒரு சர்க்யூட் பிரேக்கர் வழியாக கடந்து செல்கின்றது.
இந்த சர்க்யூட் பிரேக்கரின் வேலை என்ன என்று கேட்டால் எப்பையாவது சர்க்யூட்டில் ஷார்ட் சர்க்யூட் நடந்தாலும் அல்லது மெயின்டன்ஸ் சம்பந்தப்பட்ட பழுதுகள் நடந்தாலும் பவர் சப்ளையே முற்றிலுமாக துண்டிக்க இந்த பயன்படுகின்றது. இந்த சர்க்யூட் பிரேக்கரை கடந்து செல்கின்ற எலக்ட்ரிசிட்டி ரயிலில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர்க்கு செலுத்தப்படுகின்றது. இந்த டிரான்ஸ்பார்மரின் வேலை என்ன என்று கேட்டால் ஒரே இடத்தில் இருந்து வரும் இந்த எலக்ட்ரிசிடையே பல்வேறு இடங்களுக்கு சமமாக பிரித்துக் கொடுப்பதுதான். இதில் இருந்து செல்கின்ற இந்த எலக்ட்ரிசிட்டி ஒரு ரெக்டிஃபிகர் என்ற பகுதிக்கு செல்கின்றது. இதன் வேலை என்ன என்று கேட்டால் அல்ட்ரா நேட்டிவ் காரன்ட்டை டைரக்ட் கரண்டாக மாற்றுவது தான்.
இப்படி டைரக்டர் கரண்ட்டாக மாற்றப்பட்ட பவர் சப்ளை ஆனது மீண்டும் ஒரு இன்வெர்ட்டர் க்கு செல்லும்போது அங்கு ஏசி கரண்டியில் இருந்து டிசி கரண்டாக மாற்றப்படுகின்றது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் அதாவது அந்த சப்ளை மூலமாக வரக்கூடிய அல்ட்ரா நேட்டிவ் கரண்ட் ஆனது, ஒரு கான்ஸ்டன்ட் முறையில் இருக்காது. மேலும் இதன் வோல்டேஜில் குளறுபடி இருந்து கொண்டு இருக்கும். இதை அப்படியே நாம் ரயிலில் செலுத்தும் போது ரயிலை முறையாக இயக்க முடியாது. அதன் காரணமாக தான் ஏசி கரண்டை டிசியாக மாற்றி, அதன் பிறகு டிசி லிருந்து ஏசியாக மாற்றுகின்றன.
இந்த ரயிலை பவர் செய்வதற்கு த்ரீ பேஸ் ஏசி மோட்டார் பயன்படுத்தப்படுகின்றது. இந்த ஏசி மோட்டாரில் 3 பேஸ் இருப்பதினால் த்ரீ பேஸ் கரண்ட் தேவைப்படுகின்றது. சிங்கிள் பேசியிலிருந்து வரக்கூடிய இந்த டைரக்டர் கரண்ட் ஆனது இன்வெர்ட்டர் மூலியமாக த்ரீ பேஸ் கரண்ட் ஆக மாற்றுகின்றது. அதனால் தான் இந்த ஆற்றலானது ஏசியிலிருந்து டிசிக்கு மாறி பிறகு மீண்டும் டிசியில் இருந்து ஏசிக்கு மாற்றப்படுகிறது. இந்த மாற்றப்பட்ட கரண்ட் ஆனது ஏசி மோட்டார் க்கு செலுத்தப்படுகின்றது. இப்படி செலுத்தும் போது மோட்டார் இயங்குகின்றது. மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ள ட்ரெயினும் இயங்குகின்றது.
இதன் மூலமாக தான் எப்போதெல்லாம் பவர் சப்ளை ட்ரெயினுக்கு கொடுக்கப்படுகிறது. ரயில் இயங்கும் இந்த ட்ரெயினை கண்ட்ரோல் செய்வதற்கு நிறுத்துவதற்கும் பிரேக்கிங் சிஸ்டம் தேவை. அதற்காக இந்த ட்ரெயினில் ரீஜனரேட்டர் என்ற பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ரீஜனரேட்டர் பிரேக்கிங் சிஸ்டமானது எப்படி வேலை செய்து என்றால் இன்வெர்ட்டில் இருந்து வரக்கூடிய எலக்ட்ரிசிட்டி பதிலாக இதை எலெக்ட்ரிசிட்டியை மாற்றம் செய்து டிரான்ஸ்பார்மரில் இருந்து ஒரு லைன் வழியாக ஒரு எலக்ட்ரிசிட்டியை இந்த ஏசி மோட்டார்க்கு செலுத்தப்படுகின்றது.
அதாவது இந்த எலக்ட்ரிசிட்டி இன்வெட்டரில் இருந்து வந்து கொண்டிருந்த எலக்ட்ரிசிட்டியானது ஆப்போசிட் டைரக்ஷனில் ஃப்ளோ ஆகும்போது மோட்டாரில் எதிர் விசை உருவாகி மோட்டாரின் சுழற்சியானது சிறிது சிறிதாக குறைந்து முழுவதும் நிறுத்தப்படுகின்றது. லொகோமோ்டிவ் என்ற முறையில் பிலோவேர்ஸ் மற்றும் ஃபேன் என்ற ஆப்ஷன் உள்ளது. இவை அனைத்தும் இன்ஜின்களின் வெப்பத்தை தணிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. இதை பவர் செய்வதற்கு ஒரு பேட்டரி போன்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த பேட்டரிக்கு தேவையான பவரை இன்வெர்ட்டரிலிருந்து வரக்கூடிய ஏசி கரண்டை சிறிய ரெக்டிஃபையர் மூலமாக உள்ள ஒரு அமைப்பை வைத்து மீண்டும் டிசி கரண்ட்டாக மாற்றப்பட்டு இந்த டிசி கரண்ட் ஆனது பேட்டரியில் சேமித்து வைக்கப்படுகின்றது.
இப்படி சேமிக்கப்பட்ட இந்த கரண்ட் ஆனது எப்போது எல்லாம் தேவையோ அப்போதெல்லாம் லைட், பிலோவேர்ஸ் மற்றும் ஃபேன் போன்றவற்றை பவர் செய்வதற்கு பயன்படுகின்றது. இப்படிதான் இந்த எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் வேலை செய்கின்றது.